"நடிப்பு" சார்ந்து அனுபவப் பகிர்வு
ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகன் தன்னை எவ்வாறு தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும், ஒரு நடிகனுக்கு குரல்வளத்தின் அவசியம், நடிப்புடன் தொடர்புடைய ஏனைய கலைகளைக் கற்றுகொள்வதன் நன்மை (நடனம், சிலம்பம் போன்ற பல)
, ஒரு நடிகனுக்கு சிறந்த தொடர்பாடல் திறன் மற்றும் பல்துறை அறிவின் அவசியம், உணர்வு மற்றும் உளவியல் ரீதியாக தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளல், சமூகத்தை அவதானிக்கும் ஆற்றல், சிறந்த நடிப்பைப் பெற இயக்குனர் நடிகரைக் கையாளும் விதம், அறிமுக நடிகருக்கான பயிற்சிகள் போன்ற நடிப்பு சார்ந்த பல்வேறு விடயங்கள் பற்றி புலம்பெயர் ஈழத்துத் தமிழ் நடிகை சுதர்ஷி இக்னாரியஸ் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.